வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 22 ஜனவரி 2019 (10:42 IST)

ஜனவரி 26 டாஸ்மாக் விடுமுறை – குடிமகன்கள் வருத்தம் !

ஜனவரி 26 அன்று குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கக் கூறி மாவட்ட ஆட்சியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

நாடு முழுவதும் வரும் ஜனவரி 26 ஆம் தேதி 70 ஆவது குடியரசு தினவிழாக் கொண்டாடப்படுகிறது. பயங்கரவாத தாக்குதல் நடக்க வாய்ப்பிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பாதுகாப்புக் காரணங்களுக்காக மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களான   சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையம், மால்கள், தியேட்டர்கள் மற்றும் கோயில்கள் அகிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்த உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னை விமான நிலையத்தில் ஜனவரி 31 ஆம் தேதி வரை பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் விமான நிலையத்திற்கு ஏழு அடுக்கு பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

மேலும் இன்று தமிழக அரசு சார்பில் குடியரசு தினத்தன்று. தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் குடியரசு தினத்தன்று டாஸ்மாக் மதுபானக் கடைகள், பார்கள், தனியார் பார்கள் உள்ளிட்டவற்றில் மது விற்பனை செய்யக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பார்கள் ஸ்டார் ஹோட்டலில் உள்ள உயர்ரக பார்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.