திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 30 ஆகஸ்ட் 2021 (13:01 IST)

அனாதை கட்சியா அஇஅதிமுக? – புகழேந்திக்கு ஆதரவாக கோவை அதிமுகவினர் போஸ்டர்!

அதிமுகவிலிருந்து புகழேந்தி நீக்கப்பட்டதை கண்டித்து கோவையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் வைரலாகியுள்ளது.

அதிமுக செய்தி தொடர்பாளராக இருந்து வந்த புகழேந்தி கூட்டணி கட்சிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கடந்த சில மாதங்கள் முன்னதாக கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார். இதை எதிர்த்து ஈபிஎஸ் – ஓபிஎஸ் மீது புகழேந்தி வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் புகழேந்திக்கு ஆதரவாக கோவையின் பல பகுதிகளில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில் ”புரட்சித்தலைவி அம்மாவிற்கு ஜாமீன் வழங்கிய அஞ்சாநெஞ்சன் புகழேந்தி நீக்கத்திற்கு கண்டனம். அனாந்தை கட்சியா அஇ அண்ணா திமுக. கூட்டணி கட்சிகள் அவமானப்படுத்தி பேசுவதை கண்டித்தால் கட்சியிலிருந்து நீக்குவதா? தொண்டர்களே இந்த தலைமை தேவையா?” என வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.