1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 30 ஆகஸ்ட் 2021 (11:22 IST)

ஆதீனத்திற்கு நுழைந்தால் நித்யானந்தா கைது?? – புதிய ஆதீனம் எச்சரிக்கை!

மதுரை ஆதீன மடத்தின் புதிய ஆதீனமாக பொறுப்பேற்றவர் நித்யானந்தாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மதுரை ஆதீனம் சமீபத்தில் இறந்த நிலையில் புதிய ஆதீனமாக ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் மதுரை பீடத்தின் புதிய ஆதீனம் நான்தான் என நித்தியானந்தா பேசி வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள மதுரை புதிய ஆதீனம் “நித்யானந்தாவெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. அவர் மதுரை ஆதீனத்திற்குள் நுழைந்தால் கைது செய்யப்படுவார்” என கூறியுள்ளார்.