வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 13 ஜூன் 2023 (17:09 IST)

புறவாசல் வழியாக அச்சுறுத்தப் பார்க்கிறது பா.ஜ.க.: சோதனை குறித்து முதல்வர் ஸ்டாலின்..!

MK Stalin
அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாதவர்களை, புறவாசல் வழியாக அச்சுறுத்தப் பார்க்கும் பா.ஜ.க.வின் அரசியல் செல்லுபடியாகாது என்றும், அதனை அவர்களே உணரும் காலம் நெருங்கிக் கொண்டு இருக்கிறது என்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் ரெய்டு குறித்து முதல்வர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். 
 
அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் நடைபெற்று வரும் அமலாக்கத்துறை சோதனை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
தன் வசம் இருக்கும் விசாரணை அதிகார அமைப்புகள் மூலமாகத் தனக்கு எதிரான அரசியல் சக்திகளை பா.ஜ.க. பழிவாங்கும். அவர்களுக்குத் தெரிந்த ஒரே வழி இது மட்டும்தான் என்று நான் ஏற்கனவே சொல்லி இருந்தேன். இதற்கு இந்திய அளவில் எத்தனையோ எடுத்துக்காட்டுகள் சமீப காலங்களில் பல்வேறு மாநிலங்களில் நடந்துள்ளன
 
தலைமைச் செயலகத்தில் அமைச்சரது அறைக்குச் சென்று தேடுதல் நடத்த வேண்டிய தேவை என்ன ஏற்பட்டது என்று தெரியவில்லை. தலைமைச் செயலகத்திலும் ரெய்டு நடத்துவோம் என்று காட்டவோ அல்லது அதனைக் காட்டி மிரட்டவோ விரும்புகிறார்களா எனத் தெரியவில்லை. இவை எல்லாம் விசாரணை அமைப்பானது அரசியல் உள்நோக்கத்துடன் செயல்படுவதையே எடுத்துக் காட்டுகிறது
 
Edited by Mahendran