1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 13 ஜூன் 2023 (14:06 IST)

செந்தில் பாலாஜியின் உதவியாளரை அழைத்து சென்ற அமலாக்கத்துறை.. எங்கே அழைத்து சென்றனர்?

அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளரை அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்துச் சென்றதாகவும், அவர்கள் எங்கே அழைத்து சென்றனர் என்று தெரியவில்லை என்றும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
இன்று காலை முதல் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர் என்றும் அவர்களுக்கு பாதுகாப்பாக மத்திய ராணுவத்தின் துணை ராணுவ படையினர் பாதுகாப்பிற்கு  இருக்கின்றனர் என்பதையும் பார்த்தோம். 
 
இந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவல் படி அமைச்சர் செந்தில் பாலாஜியின் அலுவல் சார் உதவியாளர் விஜயகுமார் என்பவரை அமலாகத்துறை அதிகாரிகள் அழைத்துச் சென்றதாக தெரிகிறது. அவர் எந்த இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்? எந்த இடத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடைபெறுகிறது? என்ற தகவல் தெரிவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. 
 
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அரசு சார்பில் உதவியாளராக நியமிக்கப்பட்டவர் விஜயகுமார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
Edited by Mahendran