தொடர்புடைய செய்திகள்
- ஊருக்குள் புகுந்த காட்டு யானை - ஐந்துக்கும் மேற்பட்ட வீடுகளை சேதப்படுத்தியதால் அப்பகுதி மக்கள் அச்சம்..
- கோவையில் தோல்வி அடைந்த அண்ணாமலைக்கு மத்திய அமைச்சர் பதவியா? ஆச்சரிய தகவல்..!
- கோவை மக்களவைத் தொகுதியில் திமுக வெற்றியை தொடர்ந்து - பொதுமக்களுக்கு மட்டன் பிரியாணியை வழங்கிய திமுகவினர்.
- 28 ஆண்டுகளுக்கு பிறகு கோவையில் திமுக பாராளுமன்ற உறுப்பினரை தந்துள்ளனர் - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேட்டி!
- மக்களவைத் தொகுதியில் திமுக முன்னிலை - திமுகவினர் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்...
முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்ளும் முப்பெரும் விழாவின் தேதி, இடம் மாற்றம்.. முழு விவரங்கள்..!
தமிழக முதல்வரும் தி.மு.க. தலைவருமான முக ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ள முப்பெரும் விழாவின் தேதி, இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை செட்டிபாளையம் பகுதியில் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறச் செய்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் முப்பெரும் விழா கொண்டாட முடிவு செய்யப்பட்டது. மேலும் இந்த விழா ஜூன் 14ஆம் தேதி நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கோவை செட்டிபாளையம் பகுதியில் நடைபெற இருந்த இந்த விழா கோடை கொடிசியா மைதானத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளதாகவும், அதேபோல் ஜூன் 14ம் தேதி நடைபெற இருந்த நிகழ்ச்சி 15ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் திமுக தலைமை அறிவித்துள்ளது.
மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறச் செய்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் முப்பெரும் விழா கொண்டாடும் இந்த விழா போக்குவரத்து நெரிசல், பருவமழை காரணங்களால் தேதி, இடம் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Edited by Siva
