திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 10 ஜனவரி 2021 (09:42 IST)

ஏப்ரல் வரை மாணவர்களுக்கு இலவச டேட்டா! – எடப்பாடியார் அசத்தல் உத்தரவு!

தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக ஆன்லைன் மூலமகா வகுப்புகள் நடந்து வருவதால் கல்லூரி மாணவர்களுக்கு இலவச டேட்டா வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மாணவர்கள் ஆன்லைனில் படிப்பதற்கு ஏதுவாக இலவச டேட்டா வழங்குவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

எல்காட் நிறுவனம் மூலமாக கல்லூரி மாணவர்களுக்கு ஏப்ரல் வரை நாள் ஒன்றுக்கு 2 ஜிபி டேட்டா வழங்கும் படி முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.