செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 4 ஜனவரி 2020 (08:16 IST)

ஊராட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற துப்புரவுத் தொழிலாளர் – வைரலாகும் சரஸ்வதி அம்மாள் !

ஸ்ரீவில்லிபுத்தூர் கான்சாபுரம் ஊராட்சி தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட சரஸ்வதி என்ற துப்புரவுத் தொழிலாளி வெற்றி பெற்றுள்ளார்.

தமிழகத்தில் 8 ஆண்டுகளுக்குப் பின் தற்போது உள்ளாட்சித் தேர்தல் நடந்துள்ளது. இதில் பல சுவாரஸ்யமான முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு ஊராட்சித் தலைவர் தேர்தலுக்கு போட்டியிட்ட சரஸ்வதி என்ற 63 வயது பெண் வெற்றி பெற்று பஞ்சாயத்து தலைவராகிறார்.

முன்னரே ஊராட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்ட போது பஞ்சாயத்தில் பார்த்துவந்த துப்புரவு வேலையை ராஜினாமா செய்தார். ஆனால் தேர்தல் ரத்தானதால் அவர் தற்காலிக பணியாளராக வேலைப் பார்த்து வந்தார். இப்போது தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து ஊர் மக்களுக்கு நல்லது செய்வேன் எனக் கூறியுள்ளார்.