திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 18 ஜூலை 2023 (11:24 IST)

அமைச்சர் பொன்முடியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் பேச்சு

தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி.  விழுப்புரம், சென்னை ஆகிய இடங்களில் அவருக்கு சொந்தமான வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நேற்று காலை முதல் அமலாக்கத்துறை சோதனை நடத்தினர்.

இதற்கு திமுகவின், காங்கிரஸ், ஆம் ஆத்மி, ராஷ்டிரிய ஜனதா தளம், ஆகிய கட்சிகள் கண்டனம் தெரிவித்தனர்.

அமலாக்கத்துறையின் இந்தச் சோதனையில்  வெளிநாட்டு கரன்சிகள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

இதையடுத்து, நேற்றிரவு அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் ஆகிய இருவரையும்  அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

அமைச்சர் பொன்முடி வீட்டில் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் விடிய விடிய சோதனை செய்த நிலையில்  விசாரணை முடிவு பெற்று இன்று காலை 7 மணிக்கு அவர் வீட்டிற்கு அனுப்பப்பட்டதாக தகவல் வெளியானது.

இதையடுத்து, இன்று மாலை 4 மணிக்கு அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம சிகாமணி ஆகிய இருவரும் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த  நிலையில்,  அமலாக்கத்துறை நடத்திய விசாரணை விவரஙளை முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சர் பொன்முடியிடம் கேட்டறிந்தார்.

இதுகுறித்து செய்தி மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’ அமலாக்கத்துறை நடத்திய விசாரணை விவரஙளை கேட்டறிந்த முதலமைச்சர். துணிச்சலுடன் சட்ட ரீதியாகவும், எதிர்கொள்ளுமாறு அறிவுரை கூறினார்.

ஒன்றிய பாஜக அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளை எதிர்த்து நின்று முறியடிக்க தார்மீக ரீதியாகவும், அரசியல் மற்றும் சட்ட ரீதியாகவும் என்றும் துணை நிற்கும் என திரு.பொன்முடியிடம் முதல்வர் தெரிவித்தார்’’ என்று கூறப்பட்டுள்ளது.