வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: செவ்வாய், 18 ஜூலை 2023 (08:02 IST)

நடிகர் விஜய் அரசியல்ல படுதோல்வி அடைவார்.. தயாரிப்பாளர் கே.ராஜன்..!

Rajan
நடிகர் விஜய் அரசியலில் படுதோல்வி அடைவார் என தயாரிப்பாளர் கே ராஜன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
நடிகர் விஜய் விரைவில் அரசியலுக்கு வருவார் என்றும் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் அவர் போட்டியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காகவே அவர் மூன்று ஆண்டுகள் சினிமாவிலிருந்து விலகி முழு அளவில் அரசியலில் ஈடுபட இருப்பதாக கூறப்படுகிறது. 
 
விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என்று அவரது ரசிகர்கள் மிகவும் தீவிரமாக இருக்கின்றனர் என்றும் விஜய் அரசியலுக்கு வந்தால் அவரை முதல்வராக்குவோம் என்று கூறி வருகின்றனர் 
 
 இந்த நிலையில் விஜய் அரசியலுக்கு வந்தால் அவர் படுதோல்வி அடைவார் என்று தயாரிப்பாளர் கே ராஜன் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
 
தமிழ் திரை உலக பொருத்தவரை எம்ஜிஆர் ஜெயலலிதாவுக்கு பின்னர் கட்சி ஆரம்பித்த யாரும் இதுவரை ஜெயிக்கவில்லை என்றும் முதல்வர் ஆசை கனவில் வரும் நடிகர்கள் அனைவரும் தோல்வி அடைந்து வருகின்றனர் என்றும் கூறப்பட்டு வருகிறது.
 
Edited by Siva