செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: சனி, 27 ஜூன் 2020 (20:49 IST)

சிதம்பரம் நடராஜர் கோவில் தேர்த்திருவிழா ரத்து…

இரண்டு தீட்சிதர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, சிதம்பரம் நடராஜர் கோவில்  தேர்த்திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது.

கடந்த `19 ஆம் தேதி, சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனித் திருமஞ்சனம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அப்போது தீட்சிதர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

இந்த நிலையில் இன்று தேர்த்திருவிழா நடைபெற இருந்த நிலையில், கோவில் தீட்சிதர்களுக்கு  கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டது. எனவே, கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் இன்று நடைபெற இருந்த தேர்த்திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் கோயிலுக்கு முன்பாக போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.