புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 24 ஏப்ரல் 2021 (08:56 IST)

ஆச்சர்யமளிக்கும் வகையில் கொரோனா குறையும்… விஞ்ஞானிகள் கணிப்பு!

இந்தியாவில் கொரோனா உச்சகட்டத்தை மே மாத மத்தியில் அடையும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

இந்தியாவில் தற்போது கொரோனா பரவலின் இரண்டாம் அலை மிக வேகமாகப் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் அதே நேரத்தில் கொரோனா தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது. தினசரி 3 லட்சத்துக்கும் மேல் பாதிப்பு எண்ணிக்கை இருக்கும் நிலையில் இப்போது 24 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த பாதிப்பு எண்ணிக்கை மே மாத மத்தியில் 33 லட்சம் ஆகும் எனவும், அதன் பின்னர் ஆச்சர்யமளிக்கும் வகையில் பாதிப்பு எண்ணிக்கைக் குறையும் என்றும் ஐஐடியை சேர்ந்த விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர்.