1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 3 டிசம்பர் 2022 (11:28 IST)

4 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய பெண்! இரண்டாவது கணவருடன் சிக்கினார்!

சென்னையில் 4 ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றிய பெண் தனது இரண்டாவது கணவருடன் போலீஸில் பிடிபட்டுள்ளார்.

சென்னை மேற்கு தாம்பரம், ரங்கநாதபுரத்தை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மூத்த மகன் நடராஜன் என்பவர் ஒரு பேக்கரியில் வேலை செய்தபோது 28 வயதான அபிநயா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது.

பின்னர் இருவருக்கும் சில மாதங்கள் முன்னதாக திருமணம் நடந்த நிலையில் சமீபத்தில் கணவருடன் ஏற்பட்ட சண்டை காரணமாக அபிநயா வீட்டில் இருந்த பணம், நகைகளை எடுத்து கொண்டு மாயமானார். இதுகுறித்து நடராஜன் வீட்டார் போலீஸில் புகார் அளித்த நிலையில் 40 நாட்கள் கழித்து மகாபலிபுரசாலையில் உள்ள விடுதி ஒன்றில் அபிநயா பிடிப்பட்டுள்ளார். அவருடன் வேறு ஒரு நபரும் இருந்துள்ளார். விசாரித்ததில் அவர் அபிநயாவின் இரண்டாவது கணவர் என தெரிய வந்துள்ளது.

இதுதொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணையில் அபிநயா இதுவரை 4 ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றியது தெரிய வந்துள்ளது, அதில் இரண்டாவது கணவரான செந்தில் குமாரோடு வாழ்ந்தபோது அவர்களுக்கு குழந்தை பிறந்துள்ளது. இவர்களுக்கு 8 வயதில் மகன் ஒருவனும் உள்ளார். நான்காவதாக திருமணம் செய்த நடராஜன் வீட்டிலிருந்து திருடி நகைகளை விற்று அபிநயாவும், இரண்டாவது கணவர் செந்தில்குமாரும் செலவு செய்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Edit by Prasanth.K