செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: சனி, 4 நவம்பர் 2017 (16:56 IST)

வீணாக கடலில் கலந்த ஒரு டி.எம்.சி மழை நீர் - பொதுமக்கள் அதிர்ச்சி

சென்னையில் பெய்த மழையில் பெரும் அளவு வீணாக கடலில் கலந்துவிட்டது தெரியவந்துள்ளது.


 

 
சென்னையில் கடந்த சில நாட்களாக பகல் அல்லது இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது.  இதனால் சென்னையை சுற்றியுள்ள ஏரிகளில் கணிசமான அளவில் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. 
 
சென்னையில் பள்ளமான பகுதிகளில் நீர் தேங்கியுள்ளது. அங்கு வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ஆனால், பெரும் அளவு தண்ணீர் ஏரிகளுக்கு செல்லாமல் கடலுக்கு சென்றுவிட்டது வேதனையை ஏற்படுத்தியுள்ளது.


 

 
இதுபற்றி பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் “அக்டோபர் 31ம் தேதியிலிருந்து நவம்பர் 3ம் தேதி வரை ஒரு டி.எம்.சி மழைநீர் அடையாறு ஆற்றின் வழியாக வங்கக் கடலில்  கலந்துள்ளது. தற்போது வினாடிக்கு 5 ஆயிரம் கன அடியிலிருந்து 7 ஆயிரம் கன அடி வரை மழை நீர் வங்கக் கடலில் கலக்கிறது” என தெரிவித்துள்ளது.
 
கோடை காலத்தில் நீருக்காக மக்கள் துயரப்படுகின்ற நிலை இருக்கும் போது, ஏரிகள், ஆறுகள், கால்வாய், குளம் ஆகியவற்றை தூர் வாறி அரசு மழைநீரை சேமிக்க வேண்டும். இல்லையேல் அது வீணாக கடலில்தான் கலக்கும். அதனால் எந்த பலனும் இல்லை என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.