திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 7 ஏப்ரல் 2020 (16:50 IST)

கொரோனா தலைநகரமாக சென்னை: புள்ளி விவரம் கூறுவது என்ன?

சென்னையில் மண்டலவாரியாக ஏற்ப்பட்டுள்ள கொரோனா பாதிப்பு குறித்த விவரம் வெளியாகியுள்ளது. 
 
இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதன் காரணமாக கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு உத்தரவு வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி ஊரடங்கு முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  
 
ஊரடங்கு சூழ்நிலையிலும் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் இப்போது அதிகமாக உள்ளது. இப்போது வரை 621 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் சென்னையிலேயே அதிக பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 
 
இந்நிலையில், சென்னையில் மண்டலவாரியாக ஏற்ப்பட்டுள்ள கொரோனா பாதிப்பு குறித்த விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி ராயபுரத்தில் 27, அண்ணா நகர், திரு,வி.க நகரில் தலா 14, கோடம்பாக்கத்தில் 12, தேனாம்பேட்டையில் 10, தண்டையார்பேட்டையில் 7, வளசரவாக்கம், பெருங்குடியில் தலா 4, திருவொற்றியூர், மாதவரம், அடையாறில் தலா 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மேலும், வெளிமாவட்டங்களை சேர்ந்த 5 பேரும் சென்னையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது கூடுதல் தகவல்.