வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 9 அக்டோபர் 2023 (13:16 IST)

ஆணழகன் போட்டிக்கு தயாரான ஜிம் டிரெய்னர் உயிரிழப்பு.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

ஆணழகன் போட்டிக்கு தயாராகி வந்த ஜிம் டிரெய்னர் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை கொரட்டூரை சேர்ந்த ஜிம் டிரெய்னர் ஆணழகன் போட்டிக்கு தயாராக தினமும் பல மணி நேரம் உடற்பயிற்சி செய்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் இன்று அவர் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த நிலையில் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

ஜிம் டிரெய்னர் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும் அதனால் அவரது உயிர்  பறிபோனதாக கூறப்படுகிறது. ஆணழகன் போட்டிக்கு தயாராகி வந்தா ஜிம் டிரைனர் தினமும் பல மணி நேரம் உடற்பயிற்சி செய்ததால் தான் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

உடற்பயிற்சி என்பது ஒரு குறிப்பிட்ட அளவு மட்டுமே செய்ய வேண்டும் என்றும் அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்தாலும் ஆபத்து என்றும் கூறப்பட்டு வருகிறது. ஏற்கனவே இது போன்ற ஜிம் பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஒரு சிலர் உயிரிழந்த நிலையில் தற்போது ஜிம் ட்ரைனரே உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Mahendran