திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 9 ஜூன் 2023 (19:00 IST)

கடுமையான உடற்பயிற்சி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துமா?

உடற்பயிற்சி என்பது உடல் நலனுக்கு மிகவும் முக்கியம் என்றாலும் உடலை மிகவும் வருத்தி கடுமையாக உயர்ச்சி செய்யக்கூடாது என்றே மருத்துவ ஆலோசர்கள் தெரிவித்துள்ளனர் 
 
உடற்பயிற்சி என்பது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும் என்பதாலும் உடலில் எந்த விதமான நோயும் வரக்கூடாது என்பதற்காகவும் செய்யப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் உடலை அழித்துக் கொள்ளும் அளவிற்கு மிகவும் வருத்தி செய்யக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
சமீபத்தில் ஜிம்மில் கடுமையாக உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த பலர் மாரடைப்பு உள்பட பல்வேறு காரணங்களால் உயிரிழந்தனர் என்பதை பார்த்து வருகிறோம். 
 
அதேபோல் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஊக்க மருந்துகள் ஊசிகள் ஆகியவற்றையும் முயற்சிக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்படுகிறது. 
 
ஆனால் அதே நேரத்தில் உடற்பயிற்சி ஆபத்தானது என்ற எண்ணத்தை கொள்ள வேண்டாம் என்றும் எதையுமே அளவோடு செய்தால் எந்த வித ஆபத்தும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. உடற்பயிற்சி செய்வதற்கு முன் தகுந்த பயிற்சியாளரை அருகில் வைத்துக் கொண்டு செய்வது மிகவும் முக்கியம்
 
Edited by Mahendran