அயோத்யா மண்டப நிர்வாகத்தை அறநிலையத்துறை எடுத்த உத்தரவு ரத்து
சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள அயோத்தியா மண்டபத்தை அறநிலையத்துறை எடுத்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு சற்று முன் வெளியாகி உள்ளது
இந்த தீர்ப்பில் அயோத்தியா மண்டபம் நிர்வாகத்தை அறநிலையத்துறை எடுத்த உத்தரவு ரத்து செய்யப்படுவதாகவும் கோவிலை நிர்வகிக்க அறநிலை துறை அதிகாரி நியமிக்கப்பட்ட உத்தரவும் ரத்து என்றும் அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது
மேலும் அயோத்யா மண்டபத்தை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரும் வகையில் தர்காரை நியமித்த உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீராம் சமாஜம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
சென்னை மேற்கு மாம்பலத்தில் ஸ்ரீராம் சமாஜ் என்ற அமைப்பின் மூலம் அயோத்தியா மண்டபம் கடந்து 1954 ஆம் ஆண்டு கட்டப்பட்டு அன்றுமுதல் நிர்வகிக்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது