திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: செவ்வாய், 12 நவம்பர் 2019 (11:39 IST)

சென்னையில் குறைந்தது காற்று மாசு.. மக்கள் மகிழ்ச்சி

சமீப நாட்களாக காற்று மாசு அதிகரித்து வந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லியில் சமீப காலமாக காற்று மாசு அதிகரித்து வந்த நிலையில் சென்னையிலும் சில பகுதிகள் காற்று மாசு அதிகரித்ததாக தகவல் வெளிவந்தது.

இந்நிலையில் தற்போது காற்று மாசு குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலில், ஆலந்தூரில் 235 ஆக இருந்து காற்றின் தர குறியீடு, 91 ஆக குறைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் மணலியில் 128 ஆக இருந்த தர குறியீடு 85 ஆகவும், வேளச்சேரியில் 238 ஆக இருந்த தர குறியீடு 75 ஆகவும் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.