திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 29 மார்ச் 2021 (12:35 IST)

பொள்ளாச்சி தேர்தல் பரப்புரை… திமுக vs அதிமுக தொண்டர்கள் மோதல்!

பொள்ளாச்சியில் திமுக மற்றும் அதிமுக தொண்டர்கள் இடையே ஏற்பட்ட மோதலால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பொள்ளாச்சியில் பெண் விடுதலைக் கட்சியைச் சேர்ந்த சபரிமாலா திமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த போது அவர் அதிமுக வேட்பாளரான பொள்ளாச்சி ஜெயராமன் குறித்து குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். அதனால் அங்கிருக்கும் அதிமுக தொண்டர்கள் ஆவேசமடைந்துள்ளனர்.இதையடுத்து அதிமுக தொண்டர்களுக்கும் திமுக தொண்டர்களுக்கும் இடையே கைகலப்பு உருவாக இரு கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழல் உருவாகி உள்ளது.