திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தமிழக சட்டமன்ற தேர்தல் 2021
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 29 மார்ச் 2021 (08:01 IST)

கிடைத்தது அதிமுக பணப்பட்டுவாடா பணமா? ரூ.1 கோடி பறிமுதல் !

அதிமுக வேட்பாளர் சந்திரசேகரின் ஜேசிபி ஓட்டுநரின் வீட்டில் ரூ.1 கோடி பறிமுதல் என வெளியாகியுள்ள தகவலால் அதிர்ச்சி.

 
தமிழக தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். அதே சமயம் தேர்தல் ஆணையம் வருமான வரிதுறையினர் வாயிலாக பணப்பட்டுவாடாவையும் கண்காணித்து வருகின்றனர். 
 
அந்த வகையில், திருச்சி மணப்பாறை அதிமுக வேட்பாளர் சந்திரசேகரிடம் ஜேசிபி ஓட்டுநராக பணியாற்றும் வலசுபட்டியைச் சேர்ந்த அழகர்சாமி வீட்டில் 1 கோடி ரூபாயை வருமானவரித்துறை அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். 
 
அதேபோல வலசுபட்டியை சேர்ந்த தங்கபாண்டியன், ஆனந்த் ஆகியோர் வீடுகளிலும் வருமானவரிதுறையினர் சோதனை நடத்தினர். மேலும், நாகர்கோவிலில் தனலட்சுமி என்பவர் வீட்டில் நடந்த சோதனையில் ரூ.87.5லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல். நள்ளிரவு முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் இது குறித்து தொடர்ந்து சோதனை நடைப்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.