தமிழ்நாடு ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைய வாழ்த்துக்கள்: அமைச்சர் பியூஷ் கோயல்
தமிழ்நாட்டின் உயர்ந்த இலக்கான ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை விரைவில் அடைய வாழ்த்துகிறேன் என உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உரையாற்றினார்.
தமிழ்நாடு கலாச்சாரத்திலும், பண்பாட்டிலும், இயற்கை வளத்திலும் வளம் கொண்ட மாநிலமாகும் என்றும், சென்னை வர்த்தக மையத்தை மத்திய, மாநில அரசுகள் சேர்ந்து உருவாக்கி உள்ளது, நாட்டின் வளர்ச்சிக்கு இது போன்று இணைந்து செயல்படுவது அவசியம் என்றும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார்.
மேலும் ஆதித்யா எல்.1 விண்கலம் தனது இலக்கை அடைந்து சாதனை படைத்துள்ளது, இதற்கு முக்கிய பங்காற்றிய தமிழகத்தை சேர்ந்த திட்ட இயக்குநர் நிகர் சாஜிக்கு எனது பாராட்டுகள் என்றும், இந்தியாவின் மாநிலங்கள் வளர்ச்சி அடைந்தால் நாடும் வளர்ச்சி அடையும் என்று பிரதமர் மோடி கூறினார் என்றும் தெரிவித்தார்.
மேலும் பிரதமர் மோடி தமிழ் கலாச்சாரத்தின் மேல் பெரிதும் ஈடுபாடு கொண்டவர், அதனாலேயே நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் அடையாளமான செங்கோல் உள்ளது என்றும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தனது உரையில் கூறினார்,
Edited by Siva