வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 20 அக்டோபர் 2022 (21:30 IST)

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் எப்போது தொடங்கும் என கூற முடியாது: மத்திய அரசு

AIIMS
மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் எப்போது தொடங்கும் என கூற முடியாது என்று மத்திய அரசு பதில் அளித்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. 
 
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை தொடங்குவதற்கான ஆயத்த பணிகள் 95% முடிந்து விட்டதாக சமீபத்தில் பாஜக தலைவர் தெரிவித்திருந்தார். இது பெரும் சர்ச்சையை ஆனது என்பதும் ஆயத்த பணிகளை கட்டுமான பணி என புரிந்து கொண்ட ஒரு சிலர் அது குறித்து கேள்வி எழுப்பினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணி தொடங்கும் தேதி குறித்து கேள்வி கேட்கப்பட்டது 
இந்த கேள்விக்கு பதில் அளித்துள்ள மத்திய அரசு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணி தொடங்கும் தேதியை கூற முடியாது என பதில் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன
 
Edited by Mahendran