திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 17 அக்டோபர் 2022 (17:55 IST)

வாரம் ஒருமுறை மட்டுமே குடிநீர்: மாநகராட்சி அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி!

water
வாரம் ஒருமுறை மட்டுமே குடிநீர் வழங்கப்படும் என மதுரை மாநகராட்சி அறிவிப்பு காரணமாக பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
 
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட தாசில்தார் நகர் 37வது வார்டில் கடந்த சில மாதங்களாக குடிநீர் வினியோகம் செய்யவில்லை என்று புகார் அளிக்கப்பட்டது
 
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பாஷா என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் குடிநீர் வினியோகம் தொடர்பாக மாநகராட்சி இடம் சில கேள்விகளை கேட்டார் 
 
அந்த கேள்விக்கு பதில் அளித்துள்ள நிலையில் தாசில்தார் நகர் 37வது வார்டுக்கு உட்பட்ட தெருக்களுக்கு வாரத்தில் ஒருமுறை மட்டுமே குடிநீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் சில சமயங்களில் குடிநீர் குழாயில் கசிவு மின்சார தடை போன்ற காரணங்களால் தவிர்க்க முடியாமல் இவ்வாறு குடிநீர் விநியோகம் செய்யப் படுவதாகவும் கூறி உள்ளது
 
இந்த தகவல் அந்த பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Mahendran