திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 2 பிப்ரவரி 2022 (15:03 IST)

பகாசுரர்களை ஒழிக்க பண உதவி தேவை! – நன்கொடை கேட்கும் கமல்ஹாசன்

வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி தமிழகத்தில்  நகராட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், அனைத்துக்கட்சிகளும்  தங்கள் வேட்பாளர்களைத் தேர்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று ஒரு பதிவிட்டுள்ளார்.

அதில், நம்மீது திணிக்கப்பட்டிருக்கும் தரமற்ற அரசியலை மாற்றி, மக்கள்நலனை முன்னிறுத்தும் நேர்மையான அரசியலைச் செய்ய தீவிரமாகக் களத்தில் நிற்கிறோம். பகாசுர ஊழல்பேர்வழிகளை எதிர்த்துப் போராட பணஉதவி செய்யுங்களென உரிமையுடன் உங்களிடம் கேட்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.