1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 12 டிசம்பர் 2020 (13:44 IST)

ஆ.ராசா மீது 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு!

முதல்வர் பழனிசாமியை அவதூறாக விமர்சித்த புகாரில் ஆ.ராசா மீது 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு. 
 
முதல்வர் பழனிசாமியை திமுக எம்.பி ஆ.ராசா அவதூறாக விமர்சித்த புகாரில் ஆ.ராசா மீது 2 பிரிவுகளில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் திருமாறன், செல்வக்குமார் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 
 
ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பரப்பி ஆதாயம் தேடுதல், குற்றச்செயல்களில் ஈடுபட தூண்டுதல் பிரிவுகளில் வழக்குபதிவி செய்யப்பட்டுள்ளது.