Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தினகரனுக்கு தொப்பி சின்னம் இல்லை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Last Updated: வியாழன், 7 டிசம்பர் 2017 (17:37 IST)
தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட இரு கட்சிகள் தொப்பி சின்னத்தை கேட்பதால் டிடிவி தினகரனுக்கு அச்சின்னம் ஒதுக்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.


 
வேட்பு மனு தாக்கல், வாபஸ் ஆகியவை முடிந்து, தற்போது ஆர்.கே.நகர் தேர்தலுக்கு சின்னம் ஒதுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில், சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் டிடிவி தினகரன் தனக்கு தொப்பி சின்னம் வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளார். ஆனால் இதே சின்னத்தை மேலும் 29 பேர் கேட்டுள்ளதால் தினகரனுக்கு தொப்பி கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்தது. ஒரு சின்னத்தை பல சுயேட்சை வேட்பாளர்கள் கேட்டால், குலுக்கல் முறைப்படி சின்னம் ஒதுக்கப்படும்.
 
இந்நிலையில், தினகரனுக்கு புதிய சிக்கல் ஒன்று ஏற்பட்டுள்ளது. அதாவது, கொங்கு முன்னேற்ற கழகம், தேசிய மக்கள் சக்தி, எழுச்சி தமிழர்கள் முன்னேற்ற கழகம் ஆகிய மூன்று கட்சிகளும் தங்களுக்கு தொப்பி சின்னம் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தது.
 
தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு சின்னத்தை ஒதுக்குவதில் முன்னுரிமை அளிக்கப்படும் என தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்துவிட்ட நிலையில், தினகரனுக்கு தொப்பி சின்னம் கிடைக்க வாய்ப்பில்லை எனக்கூறப்பட்டது.

அதுபோலவே, தற்போது தொப்பி சின்னம் வேண்டும் என்ற கோரிக்கையை தேர்தல் அதிகாரி நிராகரித்தார். 
எனவே, வேறொரு புதிய சின்னத்திலேயே தினகரன் போட்டியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :