Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: வர்த்தக கணித தேர்வுக்கு மட்டும் கால்குலேட்டர் அனுமதி:

Last Modified வியாழன், 4 ஜனவரி 2018 (06:27 IST)
12ஆம் வகுப்பு
பொதுத்தேர்வில் வர்த்தக கணித தேர்வுக்கு மட்டும் கால்குலேட்டர் அனுமதிக்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார். இதனால் மாணவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

வரும் மார்ச் மாதம் 1-ந் தேதி 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுதேர்வு தொடங்குகிறது. இந்த தேர்வு ஏப்ரல் 6-ந் தேதி முடிவடைகிறது. இந்த நிலையில் கணிததேர்வு எழுதும் மாணவர்கள் ‘லாக்ரதம் டேபிள்’ புத்தகமும், ஜவுளி தொழில்நுட்பம் தேர்வு எழுதும் மாணவர்கள் ‘முழு கிராப் பேப்பரும்’ கொண்டுவர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் புள்ளியியல் தேர்வு எழுதுவோர் புள்ளியியல் டேபிளும், டிராப்ட்ஸ் மேன் தேர்வுக்கு சாதாரண ‘கால்குலேட்டரும்’, இயற்பியல், வேதியியல் தேர்வுகளுக்கு ‘லாக்ரதம் டேபிள்’ புத்தகமும் கொண்டு வர வேண்டும். இதேபோல் வர்த்தக கணித தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டும் சாதாரண கால்குலேட்டர் அனுமதி உண்டு என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :