திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: கோயம்புத்தூர் , புதன், 13 மார்ச் 2024 (12:55 IST)

CAA சட்டம் ஏற்கத்தக்கது அல்ல - தமிழக வெற்றிக் கழகம் போஸ்டர்...

CAA எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டு விட்டதாக நேற்று முன்தினம் மத்திய அரசு தெரிவித்து இருந்தது. 
 
இதனை தொடர்ந்து நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினர் இச்சட்டத் திருத்ததிற்கு கண்டனம் தெரிவித்த ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். 
 
தமிழகத்திலும் பல்வேறு அரசியல் கட்சியினர் அரசியல் தலைவர்கள்  கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
 
அண்மையில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவக்கிய நடிகர் விஜய் யும் இந்த சட்டத்திற்கு கண்டனங்களை பதிவு செய்திருந்தார். 
 
இந்நிலையில் கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் இந்த சட்டம் ஏற்கத்தக்கது அல்ல என குறிப்பிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் கோவைத் தெற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. 
 
அந்த போஸ்டரில் "பிளவுவாத அரசியலை முன்னிறுத்தி செயல்படுத்தப்படும் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் (2019) ஏற்கத்தக்கது அல்ல" "Withdraw CAA" என  குறிப்பிடப்பட்டுள்ளது