செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: செவ்வாய், 12 மார்ச் 2024 (17:43 IST)

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அந்த அதிகாரம் இல்லை- அண்ணாமலை

Annamalai
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு   நாடு முழுவதும் சிஏஏ சட்டம் அமலுக்கு வருவதாக அறிவித்தது. பாஜக அரசு அறிவித்தபடி,  நேற்று சிஏஏ சட்டம் அரசிதழில் வெளியானதாக அறிக்கை வெளியிடப்பட்டு அமலுக்கு வந்துள்ளது.
 
இதற்கு காங்கிரஸ், திமுக, தமிழக வெற்றிக் கழகம், விசிக உள்ளிட்ட கட்சி தலைவர்களும், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்கம் முதல்வர் மம்தா  பானர்ஜி, கேரளம்முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட முதல்வர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
 
இந்த நிலையில், சிஏஏ பற்றி,  சென்னையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 
குடியுரிமை என்பது பிறப்பு மற்றும் வழித்தோன்றல் ஆகிய 2 தேவைகளை பூர்த்தி செய்யும். தமிழ் நாட்டில் வழக்கம் போல அரசியல் கட்சிகள் குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றி தெரியாமல் பேசுகிறார்கள்; குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு ஒரு சதவீதம் கூட பாதிப்பு ஏற்படாது. இஸ்லாமியர்களின் குடியுரிமை பறிப்பதற்கான சட்டமும் இது இல்லை என்று தெரிவித்துள்ளார்.
 
மேலும்,குடியுரிமை திருத்த சட்டம் யாருக்கும் எதிரானது இல்லை. தமிழ்நாட்டில் குடியுரிமை திருத்த சட்டத்தை அனுமதிக்க மாட்டேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறுகிறார். அவருக்கு அந்த அதிகாரம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.