1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 21 ஜனவரி 2018 (12:12 IST)

தமிழிசை, பொன்னார் கருத்து வேறுபாடு!

தமிழக அரசு பேருந்து கட்டணத்தை உயர்த்தி நேற்று முதல் அமலுக்கு கொண்டு வந்தது. இதற்கு அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
 
எரிபொருள் விலையேற்றம், ஊதிய உயர்வு, பராமரிப்பு கட்டண உயர்வு போன்ற காரணங்களால் பேருந்து கட்டணங்களை உயர்த்துவதாக தமிழக் அரசு அறிவித்து நேற்று முதல் அதனை அமலுக்கு கொண்டு வந்தது.
 
இந்த கட்டண உயர்வுக்கு பல்வேறு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் பாஜகவும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதன் தமிழக தலைவர் தமிழிசை பேருந்து கட்டணத்தை உயர்த்தியதால் தமிழக அரசை கண்டித்து வரும் 24-ஆம் தேதி போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளார்.
 
ஆனால் அதே கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் இந்த பேருந்து கட்டண உயர்வை ஆதரித்து பேசியுள்ளார். பேருந்து கட்டண உயர்வு சரியானதே, போக்குவரத்து துறை நலிவடைந்துள்ளது என கூறியுள்ளார் அவர்.