புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 18 டிசம்பர் 2023 (21:34 IST)

நாளை நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு- அண்ணா பல்கலை

anna university
நாளை ( டிசம்பர் 19) நடைபெறவிருந்த பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான தேர்வுகள், கனமழையின் காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலை  அறிவித்துள்ளது.

தென்மாவட்டங்களில் குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில், பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை மீட்க தமிழக அரசு துரித நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.  இந்த நிலையில்,  நாளை  நடக்கவிருந்த   தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலை தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் நாளை (டிசம்பர் 19) நடைபெறவிருந்த பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான தேர்வுகள், கனமழையின் காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலை  அறிவித்துள்ளது.