1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 2 ஜூலை 2018 (12:31 IST)

சேலத்தில் பேய் மழை ; வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சிறுவன்

நேற்று சேலத்தில் பெய்த கனமழையில் சிறுவன் ஒருவன் அடித்து செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
தென் மேற்கு பருவமழை மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், திண்டுக்கல், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் நேற்று மாலை பெய்தது. அதேபோல், சேலம் மாவட்டத்தில் நேற்று இரவு விடிய விடிய கனமழை பெய்தது.
 
இதனால், சேலத்தில் உள்ள பல குடியிறுப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. சில இடங்களில் தெரு முழுவதும் ஆறு போல தண்ணீர் ஓடியது. இந்நிலையில், சேலம் நாராயணநகர் பகுதியில் 4 சிறுவர்கள் சினிமா பார்த்துவிட்டு தங்களின் வீடுகளுக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது, ஒரு சாலையை கடந்த போது ஒரு சிறுவனை வெள்ளம் இழுத்து சென்றது. 
 
எனவே, நேற்று இரவிலிருந்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் அந்த சிறுவனை தேடி வருகின்றனர். ஆனால், இதுவரை அந்த சிறுவன் மீட்கப்படவில்லை. இது அந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.