1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 26 ஜூன் 2018 (21:46 IST)

பிரபல காமெடி நடிகரின் மனைவியிடம் செயின் பறிப்பு

சேலத்தில் காமெடி நடிகர் பெஞ்சமின் மனைவியிடம் இரு சக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் செயினை பறித்து சென்றனர்.
விஜய்யின் திருப்பாச்சி திரைப்படத்தில் விஜய்க்கு நண்பராக நடித்து பிரபலமானவர் தான் பெஞ்சமின். இவரது மனைவி எலிசபெத் சேலத்தை சேர்ந்தவர்.
 
இந்நிலையில் நேற்று எலிசபெத் சேலம் கந்தம்பட்டி பைபாஸ் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் அவரைப் பின்தொடர்ந்த மர்ம நபர்கள், அவர் அணிந்திருந்த 3 பவுன் செயினை திடீரென பறித்துக் கொண்டு தப்பினர்.
இதனையடுத்து எலிசபெத் இதுகுறித்து சூரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.