வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 14 ஜனவரி 2019 (21:46 IST)

அதிமுக+ பாஜக+பாமக +தேமுதிக தேறுமா?

சட்டமன்ற தேர்தலாக இருந்தாலும் பாராளுமன்ற தேர்தலாக இருந்தாலும் தமிழகத்தை பொருத்தவரை மாநில கட்சிகளின் ஆதிக்கமே அதிகம் இருக்கும். மொத்தமுள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளில் பெரும்பாலானவற்றை அதிமுக, திமுகவும் மீதியை பாமக, மதிமுக, கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளே பெரும். வெகு சொற்பமாகவே காங்கிரஸ், பாஜக வெற்றி பெறுவதுண்டு

இந்த நிலையில் கடந்த நான்கரை ஆண்டு மத்திய ஆட்சியில் கடும் பாதிப்புக்குள்ளான தமிழக மக்கள் பாஜக மீது கடும் கோபத்தில் உள்ளனர். காவிரி, மேகதாது, மீத்தேன் விவகாரம், நீட், வெள்ள பாதிப்பு உள்பட பல விஷயங்களில் தமிழக மக்களின் குரலை மத்திய அரசு கண்டுகொள்ளவே இல்லை

எனவே பாஜக மீது கடும் அதிருப்தியில் மக்கள் இருக்கும் நிலையில் அக்கட்சியுடன் அதிமுக, தேமுதிக, பாமக கூட்டணி வைத்தால் நிச்சயம் அந்த கட்சிகளுக்கு பாதிப்பே கிடைக்கும். பாஜக அல்லாத அதிமுக, பாமக, தேமுதிக கூட தேறுவதற்கு வாய்ப்பு உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். இருப்பினும் கடைசி நேர மாறுதல் மற்றும் மக்கள் மனதில் துல்லியமாக என்ன இருக்கின்றது என்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்பதால் தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பாரப்போம்