கைவிரித்த நீதிமன்றம்: சரணடையும் பாலகிருஷ்ண ரெட்டி?

Last Modified சனி, 12 ஜனவரி 2019 (18:29 IST)
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் மீது எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று நிலுவையில் இருந்தது.    
 
1998 ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தின் போது பேருந்துகள் மீது கற்களை வீசி சேதப்படுத்தியதாக இவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின மீதான் தீர்ப்பு வெளியானது. அதில் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
 
ஆனால், பாலகிருஷ்ண ரெட்டி மேல்முறையீடு செய்ய இருப்பதால் தண்டனைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. மேலும், பாலகிருஷ்ணா ரெட்டி தனது பதவியை ராஜினாமாவும் செய்தார். 
 
பாலகிருஷ்ணா ரெட்டி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததில், தண்டனையை நிறுத்தி வைக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்ததோடு அவரை குற்றவாளி என்று அறிவித்தது. இந்த வழக்கு அடுத்தகட்ட விசாரணைக்காக பிப்ரவரி முதல் வாரத்திற்கு தள்ளிவைக்கப்பட்டது. 
 
இந்நிலையில், பாலகிருஷ்ண ரெட்டி சம்மந்தப்பட்ட நீதிமன்றத்தில் சரணடைய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற வேண்டும். அநேகமாக திங்கள்கிழமை நீதிமன்றத்தில் அவர் சரண் அடைவார் என்று தெரிகிறது. இதற்கான ஆலோசனைகலும் நடைப்பெற்று வருகிறதாம். 


இதில் மேலும் படிக்கவும் :