1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 12 ஜூலை 2021 (12:42 IST)

மேகதாது விவகாரம் - முழு ஒத்துழைப்பு அளிப்பதாக பாஜக உறுதி

மேகதாது விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு தமிழக பாஜக முழு ஒத்துழைப்பு வழங்கும் என அறிவிப்பு. 

 
கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட விடாபிடியாக முயன்று வருவது தொடர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு மேகதாது அணைக்கு மறுப்பு தெரிவித்து வரும் நிலையில் கர்நாடக அரசு அணை கட்டுவதில் தீவிரம் காட்டி வருகிறது.
 
இந்நிலையில் மேகதாது அணை விவகாரத்தை சட்ட ரீதியாக எதிர்கொள்வது மற்றும் அரசியல் நடவடிக்கைகள் குறித்து இன்று திமுக தலைமையிலான அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கி நடந்து வருகிறது. இதில் அதிமுக, பாமக, விசிக, மதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சி பிரமுகர்களும் கலந்து கொண்டுள்ளனர். 
 
இந்த கூட்டத்தில் பாஜக சார்பில் பேசிய வி.பி.துரைசாமி, மேகதாது விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு தமிழக பாஜக முழு ஒத்துழைப்பு வழங்கும். மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு எடுக்கும் முடிவுக்கு தமிழக பாஜக ஆதரவளிக்கும். தமிழக அரசு சட்டப் போராட்டம் நடத்தினாலும் ஆதரவு தருவோம் என கூறினார்.