அடடா ஆரம்பிச்சிட்டாங்கள... இனிமே அதிமுகவுக்கு தலைவலி தான்...
உள்ளாட்சி தேர்தலுக்கு அதிமுக கூட்டணியில் இருந்து 25% இடங்களை கேட்க பாஜக முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத நிலையில் வரும் டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அரசியல் கட்சிகள் தற்போது முதலே உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகி வருகின்றனர். அந்த வகையில் திமுக, அதிமுக,தேமுதிக, பாஜக ஆகிய கட்சிகள் விருப்ப மனு விநியோகத்தை துவங்கியுள்ளன.
அதிமுக கூட்டணியில் 25% இடங்களை கேட்க பாஜக முடிவு செய்துள்ளதாம். குறிப்பாக கோவை, திருப்பூர், நாகர்கோவில் மாநகராட்சியையும் பாஜ குறிவைத்து காய்நகர்த்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
அதேபோல மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவியையும் கேட்க முடிவு செய்துள்ள்னராம். குறைந்தபட்சம் 15% இடங்கள் வரை நிச்சயமாக அதிமுகவிடம் இருந்து பேசி வாங்க வேண்டும் என பாஜக திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.