திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Updated : செவ்வாய், 19 நவம்பர் 2019 (11:00 IST)

மாமல்லபுரத்தை இன்று “Free” ஆக பார்க்கலாம்..

உலக பாரம்பரிய வாரம் கடைபிடிக்கப்படும் நிலையில் இன்று ஒரு நாள் மட்டும் மாமல்லபுரத்தின் புராதன சின்னங்களை இலவசமாக காணலாம் என தொல்லியல் துறை அறிவித்துள்ளது.

உலக பாரம்பரிய வாரம்,. நவம்பர் 19 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் தொல்லியல் துறையால் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் மாமல்லபுர புராதான சின்னங்களை இன்று (19.11.2019) ஒரு நாள் மட்டும் சுற்றுலா பயணிகள் கட்டணம் இல்லாமல் காணலாம் என தொல்லியல் துறை அறிவித்துள்ளது.

மேலும் மாமல்லபுரத்தின் கடற்கரை கோயில் வளாகத்தில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் உலக பாரம்பரிய வார விழா கொண்டாடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.