Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மேயரை மக்களே தேர்ந்தெடுக்கும் மசோதா - சட்டசபையில் இன்று தாக்கல்

Last Modified வியாழன், 11 ஜனவரி 2018 (12:18 IST)
தமிழக மாநகராட்சி மேயர்களை மக்களே தேர்தெடுக்கும் மசோதா தமிழக சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 
2016க்கு முன் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தலைவர்களையும் மக்களே தேர்ந்தெடுக்கும் முறை இருந்தது. ஆனால், 2016ம் ஆண்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதா அதை மாற்றி கவுன்சிலர்களே பெரும்பான்மையின் அடிப்படையில் தங்கள் தலைவர்களை தேர்ந்தெடுக்கும் நடைமுறையை கொண்டு வந்தார்.
 
ஆனால், அது நடந்து ஒன்றரை வருடங்கள் ஆகியும்,  இதுவரை தமிழகத்திற்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை. 
 
இந்நிலையில், மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி தலைவர்களை மக்களே நேரிடையாக தேர்வு செய்யும் வகையில் புதிய மசோதாவை அமைச்சர் வேலுமணி இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :