1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (15:38 IST)

திடீரென தீப்பிடித்த பைக், தெறித்து ஓடிய மக்கள்! – சென்னையில் பரபரப்பு!

Bike
சென்னையில் சாலையில் சென்றுக் கொண்டிருந்த பைக் திடீரென தீப்பிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆவடியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் நேற்று பூந்தமல்லியில் தனது இருசக்கர வாகனத்தை வாட்டர் சர்வீஸ் செய்து விட்டு சிடிஎச் சாலையில் சென்றுக் கொண்டிருந்துள்ளார்.

அப்போது நடுவழியில் திடீரென பைக் தீப்பிடிக்கவே அலறிய அவர் பைக்கை சாலையிலேயே நிறுத்தி விட்டு இறங்கி ஓடியுள்ளார். சிறிது நேரத்தில் பெட்ரோல் டேங்கிலும் தீப்பிடித்ததால் பைக் கொளுந்துவிட்டு எரிய தொடங்கியுள்ளது. அக்கம்பக்கம் இருந்தவர்கள் தண்ணீர் ஊற்றி அணைக்க முயன்றும் முடியவில்லை.

பின்னர் டிராக்டர் மூலமாக தண்ணீர் கொண்டு வந்து தீயை அணைத்துள்ளனர். தற்போது வெயில் அதிகமாக இருப்பதால் வெயிலின் தாக்கம் காரணமாக பெட்ரோல் டேங்குகள் தீப்பிடிக்கலாம் என்பதால் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்க வேண்டும் என பலரும் அறிவுறுத்தி வருகின்றனர்.