வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 9 டிசம்பர் 2021 (08:01 IST)

விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் கருப்புப்பெட்டி எங்கே? தேடும் பணி தீவிரம்

விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் கருப்புப்பெட்டி எங்கே? தேடும் பணி தீவிரம்
நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் அருகே காட்டேரி என்ற பகுதியில் நேற்று ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானது. 
 
இந்த விமானத்தில் முப்படை ராணுவ தளபதி பிபின் ராவத் அவரது மனைவி உள்பட 14 பேர் பயணம் செய்தனர் என்பதும் இதில் 13 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் கருப்பு பெட்டியை தேடும் பணியில் இராணுவத்தினர் தீவிரமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
 
இந்த கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டால் தான் விபத்துக்கான காரணம் தெரியவரும் என்றும் அதன்பிறகு விசாரணை முடுக்கி விடப்படும் என்றும் கூறப்படுகிறது