வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : செவ்வாய், 5 செப்டம்பர் 2023 (15:57 IST)

பாரத் என்ற வார்த்தையை பயன்படுத்துவது தவறு என்று கூற முடியாது: டி.ஆர்.பாலு

பாரத் என இந்தியாவை அழைப்பதை தவறு என்று கூற முடியாது என்றும்  ஏனெனில் பாரத் என்பது அரசியலமைப்பு சட்டத்தில் உள்ளது என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் டி ஆர் பாலு தெரிவித்துள்ளார்.  
 
இன்னும் ஒரு சில நாட்களில் பாராளுமன்றத்தின் சிறப்பு கூட்டம் நடைபெற இருப்பதை அடுத்து அதில் இந்தியா என்ற பெயரை பாரத் என்ற பெயர் மாற்றம் செய்ய தீர்மானம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
இதுபற்றி டிஆர் பாலு கூறிய போது பெரும்பான்மை இருப்பதால் பாஜக எதையும் செய்ய நினைக்கிறது என்றும் பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் எதற்காக என்பது தற்போது வரை தெரியவில்லை என்றும் தெரிவித்தார். 
 
மேலும் பாரத் என்ற வார்த்தை அரசியலமைப்பு சட்டத்தில் உள்ளதால் பாரத் என்ற வார்த்தையை பயன்படுத்துவது தவறு என்று கூற முடியாது என்று கூறிய டி ஆர் பாலு அதே நேரத்தில் இந்தியா பெயரை உச்சரிக்க பாஜக பயப்படுகிறது என்றும் தெரிவித்தார்
 
Edited by Mahendran