திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 5 செப்டம்பர் 2023 (14:10 IST)

வட இந்தியாவின் பப்பு ராகுல் காந்தி, தென் இந்தியாவின் பப்பு உதயநிதி ஸ்டாலின்: அண்ணாமலை

வட இந்தியாவின் பப்பு ராகுல் காந்தி என்றால் தென்னிந்தியாவின் பப்பு உதயநிதி என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடும் விமர்சனம் செய்துள்ளார். 
 
தாத்தா அப்பா ஆகியோர் கட்டிக் காத்த கட்சியில் மிக எளிதாக புகுந்து அரசியல் செல்வதால் அவர்களுக்கு தான் செய்வது தப்பு என்றே தெரியவில்லை என்று அவர் கூறினார்.  
 
தான் சொல்வது தப்பு என்பதை கூட புரிந்து கொள்ளாமல் மாற்றி மாற்றி இருவரும் பேசி வருகின்றனர்  தமிழ்நாட்டில் சனாதன தர்மம் என்பது வேறு, இந்தியாவில் சனாதன தர்மம் என்று வேறு என்று உளறுவதை இவர்களிடமிருந்து தான் பார்க்க முடிகிறது ’
 
2000 ஆண்டுகளாக கொடுக்காத ஒரு விளக்கத்தை சனாதனம் குறித்து திமுகவினர் தற்போது கொடுத்து வருகின்றனர்.  தன்னுடைய தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்காதவர் ஒரு மனிதனே இல்லை, அந்த வகையில் உதயநிதி ஸ்டாலின் மன்னிப்பு கேட்டு தன்னை மனிதர் என்பதை நிரூபித்துக் கொள்ள வேண்டும் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்
 
Edited by Siva