அதிமுகவிற்கு தலைகுனிந்த சர்கார் படக்குழு - காட்சிகள் நீக்கும் பணி தொடக்கம்

Last Modified வெள்ளி, 9 நவம்பர் 2018 (11:48 IST)
அதிமுக-வினரின் கோரிக்கையை ஏற்று சர்கார் படத்தின் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க முடிவு செய்த படக்குழு அதற்கான வேலைகளை ஆரம்பித்துள்ளது. 
 
விஜய்யின் சர்கார் படத்தில் தமிழக அரசின் இலவச பொருட்களை தீயில் போட்டு எரிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. மேலும் இந்த காட்சியில் படத்தின் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாசே நடித்துள்ளார்.
 
இதுபோன்ற காட்சிகளை சர்கார் படக்குழுவினரே நீக்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர் தெரிவித்தனர். இதன் தொடர்ச்சியாக நேற்று மாலையில் சர்கார் படம் ஓடும் தியேட்டர்கள் முன்பு அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் குதித்தனர்.
 
பிறகு போலீசார் தலையிட்டு அவர்களை சமாதானம் செய்தனர். இதுபோன்ற மோதல் மீண்டும் ஏற்படாமல் இருக்கவேண்டும் என்பதை எண்ணி ,  படத்தின் காட்சிகளை நீக்க படக்குழு முடிவு செய்திருந்தது.
 
இந்நிலையில் தற்போது அதிமுக - வினரின் கோரிக்கைகளை ஏற்று படத்தின் சில காட்சிகளை நீக்கும் பணிகளை சர்கார் படக்குழுவினர் தொடங்கியுள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :