திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 14 ஜூலை 2020 (16:29 IST)

உயிரைப் பணயம் வைக்கு ஊழியர்களின் சம்பளத்தைக் குறைத்த ஸ்விக்கி – திருச்சியில் போராட்டம்!

கொரோனா லாக்டவுன் நேரத்திலும் உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களின் சம்பளத்தைக் குறைத்த ஸ்விக்கி நிறுவனத்துக்கு எதிராக ஊழியர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

கொரோனா காரணமாக பல்வேறு தொழில் நிறுவனங்களும் தங்கள் ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பைக் காரணம் காட்டி ஊழியர்களின் சம்பளத்தில் கைவைத்து வருகின்றன. இந்நிலையில் கொரோனா பரவல் அதிகமாக இருக்கும் வேளையிலும் தங்கள் உயிருக்கு ஆபத்து இருக்கும் நிலையிலும் வீடு வீடாக சென்று உணவு டெலிவரி செய்கின்றனர் ஸ்விக்கி மற்றும் ஸொமொட்டோ போன்ற ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களின் தொழிலாளர்கள்.

ஆனால் ஸ்விக்கி நிறுவனம் தொழிலாளர்களின் சம்பளத்தைக் குறைத்துள்ளது. இதனால் அதிருப்தியடைந்த திருச்சி ஸ்விக்கி ஊழியர்கள் தில்லைநகரில் உள்ள் ஸ்விக்கி நிறுவனத்திற்கு எதிராக கூட்டமாக நின்று தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். முன்னதாக இது சம்மந்தமாக நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.