வியாழன், 7 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 6 ஆகஸ்ட் 2024 (15:15 IST)

ஸ்ரீவில்லிபுத்தூர் உற்சவத்தில் சாதிய அடையாளங்களுக்கு தடை..! நீதிமன்றம் அதிரடி..!

Madurai Court
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் நாச்சியார் கோயிலின் ஆடி உற்சவ திருவிழா மற்றும் தேர் திருவிழாவில் ஜாதிய அடையாளங்களுக்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் மதுரைகிளை உத்தரவிட்டுள்ளது.
 
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள நாச்சியாா் (ஆண்டாள்) திருக்கோயில் 108 வைணவத் திருத்தலங்களில் பிரச்சித்திப் பெற்றது. இந்த கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். ஆண்டாள் கோயில் தேரோட்டம் நாளை (ஆக. 7ம் தேதி) கோலாகலமாக நடைபெற உள்ளது. 
 
இந்நிலையில் சந்தனகுமார் என்பவர் தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி அமர்வு, ஜாதிய தலைவர்களின் உருவப்படம் பொறிக்கப்பட்ட டி-ஷர்ட் அணிவது, கோடி பிடிப்பது போன்ற செய்லகளில் ஈடுபட தடை விதித்துள்ளது.

 
சாதியை குறிக்கும் விதத்தில் தலையில் ரிப்பன் கட்டிச் செல்லக் கூடாது என்றும் தேரோட்டத்தை அமைதியான முறையில் நடத்துவதை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் உறுதி செய்ய மீண்டும் எனவும் நீதிபதிகள் ஆணை பிறப்பித்துள்ளனர்.