செவ்வாய், 17 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 26 செப்டம்பர் 2024 (13:59 IST)

சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா.! முன்னாள் அமைச்சர் பங்கேற்பு..!!

Award Function
இளம்குரல் அறக்கட்டளை 11ஆம் ஆண்டு துவக்க விழா, விவேகா சாதனை புத்தகம் தொடக்க நிகழ்ச்சி மற்றும் விருது வழங்கும் விழா சென்னை கொளத்தூரில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.
 
இளம்குரல் அறக்கட்டளை தலைவர் சுரேஷ் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தெருக்கூத்து கலைஞர்கள், அரசு பள்ளி ஆசிரியர்கள், காவல்துறையினர், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு துறைகளில் சாதனை படைத்த சாதனையாளர்களுக்கு இளம்குரல் தமிழ் ரத்னா விருது வழங்கப்பட்டது.
 
இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக  முன்னாள் நல்வாழ்வு துறை அமைச்சர் H.V.ஹண்டே,  பிரபல சின்னத்திரை நடிகை பிரேமி வெங்கட், சமூக சேவகர் ஆர்.கோபாலகிருஷ்ணன்,  மருத்துவ சேவகர் டாக்டர் நரேஷ் குமார், காவல்துறை உதவி ஆய்வாளர் அபர்ணா, அகில இந்திய வழக்கறிஞர் கூட்டமைப்பு தலைவர் வழக்கறிஞர் சத்தியசீலன், சமூக ஆர்வலர் பொற்செல்வி ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

 
மேலும் இந்த நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகர்கள், அரசியல் பிரமுகர்கள், சினிமா நட்சத்திரங்கள் மற்றும் இளம்குரல் அறக்கட்டளையின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.