செவ்வாய், 17 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 15 அக்டோபர் 2024 (07:12 IST)

சென்னையில் போதை மருந்து விற்பனை.. சினிமா உதவி இயக்குனர் அதிரடி கைது..!

Arrest
சென்னையில் போதை மருந்து விற்பனை செய்த சினிமா உதவி இயக்குனர் அதிரடியாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை அசோக் நகர் பகுதியில் போதை மாத்திரைகள், கஞ்சா ஆகியவை விற்பனை செய்யப்படுவதாக கேகே நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்த நிலையில், அதிரடியாக ரோந்து பணியில் காவல்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர்.

அப்போது, சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த ஒரு நபரை பிடித்து விசாரித்ததில், அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தது மட்டுமன்றி, அவரிடம் 30 போதை மாத்திரைகள் மற்றும் 100 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
 
இதையடுத்து அவரை விசாரணை செய்தபோது, அவர் ஒரு சினிமா உதவி இயக்குனர் என்றும், 25 வயதான ஸ்ரீதர்சன் என்ற பெயரை உடையவர் என்றும் தெரியவந்தது.

இதனை அடுத்து, தர்சனை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை செய்து வருவதாகவும், அவர் யாரிடமிருந்து கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் வாங்குகிறார், யாருக்கு விற்கிறார் என்பது குறித்து விசாரணையில் சில முக்கிய விஷயங்கள் தெரியவந்துள்ளதாகவும் காவல்துறை தரப்பிலிருந்து கூறப்படுகிறது.


Edited by Siva