செவ்வாய், 17 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 15 அக்டோபர் 2024 (07:05 IST)

கனமழை எதிரொலி: சென்னையில் இன்று நடைபெற இருந்த பி.எட் கலந்தாய்வு ஒத்திவைப்பு!

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருவதை அடுத்து, இன்று, அதாவது அக்டோபர் 15ஆம் தேதி, சென்னையில் நடைபெற இருந்த பி.இட். கலந்தாய்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாவரவியல், விலங்கியல், வேதியியல், இயற்பியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று நடைபெற இருந்த நிலையில், இந்த கலந்தாய்வு தேதியை மாற்றி, கல்லூரி கல்வி ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது குறித்து வெளியான செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

சென்னை லேடி வில்லிங்டன் கல்வியியல் கல்லூரியில் இன்று நடைபெற இருந்த பி.இட். தேர்வு கனமழை காரணமாக அக்டோபர் 21ஆம் தேதி திங்கட்கிழமை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக மாணவர்களின் பாதுகாப்பை கணக்கில் கொண்டு இவ்வாறு ஒத்திவைக்கப்பட்டதாகவும், எனவே இன்று கலந்தாய்வு இல்லை என்பதை மனதில் கொண்டு மாணவர்கள் சென்னைக்கு வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.



Edited by Siva